UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM
ADDED : ஜூன் 28, 2024 08:01 AM
பாட்னா:
நீட் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ., விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில், பீஹாரின் பாட்னாவில் மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
தேர்வுக்கு முன்னதாக, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அங்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வைத்தே அவர்கள் விடைகளை மனப்பாடம் செய்துள்ளனர். இதற்காக மாணவர்களை அழைத்து செல்லும் பணியை மணீஷ் குமார் செய்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு குற்றவாளியான அசுதோஷ், மாணவர்கள் தங்க வசதி செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
5 பேரிடம் விசாரணை
நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தின் கோத்ராவில் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ஜலராம் பயிற்சி மைய நிர்வாகி, மற்றும் தேர்வு எழுதியவர்களின் பெற்றோர்கள் 5 பேரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.