UPDATED : மே 05, 2025 12:00 AM
ADDED : மே 05, 2025 05:54 PM

சென்னை:
சென்னை ஐஐடி-ல், ஸ்வயம் பிளஸ் மூலம் 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
25 முதல் 45 மணி நேரம் வரை கொண்ட இப்படிப்புகள் இணைய வழியில் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்றவகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 படிப்புகள் வருமாறு:
*ஏஐ இயற்பியல்
*ஏஐ வேதியியல்
*ஏஐ கணக்கியல்
*ஏஐ கிரிக்கெட் பகுப்பாய்வு
*5.பைதானைப்பயன்படுத்தி ஏஐ/எம்ஐ
இந்த பாடத்திட்டங்களின் சிறப்பம்சங்கள்:
*தேசிய கிரடிட் கட்டமைப்புடன் ஒருங்கிணக்கப்பட்டது, வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டது.
*நேரடிச் செயல்பாடுகள், உண்மையான தரவுத் தொகுப்புகள், மாதிரி ஆய்வுகள் அடிப்படையிலான கற்றல்.
*சாதாரண கட்டணத்தில் சான்றிதழ் பெறவாய்ப்பு
*திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகம் கிரடிட் வழங்கலாம்.
தகுதி
இந்த பாடத்திட்டங்களில் அனைத்து கல்விப் பின்னணியையும் (பொறியியல், அறிவியல், வணிகவியல், கலை, பல்துறை) சேர்ந்த இளங்கலை-முதுகலை மாணவர்கள் சேரமுடியும். உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் இதில் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏஐ குறித்த முன்கற்றல் அல்லது கோடிங் அனுபவம் தேவையில்லை.
ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பு மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பபதிவு செய்வதற்கு மே 12, 2025 கடைசி நாளாகும்: https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses
பாடத்திட்டங்கள் பற்றிய மேலும் தகவல்களை அறிந்துகொள்ள pmu-sp@swayam2.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

