தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுாலகங்களுக்கு விரைவில் புதிய நுால்கள்; மாவட்ட நுாலக அலுவலர் தகவல்

நுாலகங்களுக்கு விரைவில் புதிய நுால்கள்; மாவட்ட நுாலக அலுவலர் தகவல்

நுாலகங்களுக்கு விரைவில் புதிய நுால்கள்; மாவட்ட நுாலக அலுவலர் தகவல்


UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM

ADDED : ஜூலை 09, 2025 08:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM ADDED : ஜூலை 09, 2025 08:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
கோவை நுாலகங்களுக்கு தேவையான, புதிய நுால்கள் வாங்கப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு மாதங்களில், அனைத்து நுாலகங்களுக்கும் புதிய நுால்கள் வந்து விடும் என கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்ட மைய நுாலகங்கள், கிளை நுாலகங்கள், ஊர்புற நுாலகங்கள் மற்றும் பகுதிநேர நுாலகங்கள் என, 4,600க்கும் மேற்பட்ட அரசு நுாலகங்கள் செயல்படுகின்றன. கோவை மாவட்டத்தில், முழு நேர நுாலகங்கள் மற்றும் பகுதி நேர நுாலகங்கள் என, 250 நுாலகங்கள் உள்ளன.

இந்த நுாலகங்களுக்கு தேவையான நுால்கள், ஆண்டுதோறும் தமிழக பொது நுாலகத்துறை மூலம், பதிப்பாளர்கள் மற்றும் பதிப்பகங்களிடம் இருந்து, கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து நுாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கோவையில் உள்ள நுாலகங்களுக்கு, 2021ம் ஆண்டுக்கு பிறகு, புதிய நுால்கள் வாங்கப்படவில்லை. பழைய நுால்கள் மட்டுமே உள்ளன. புதிய நுால்களை வாசிக்கும் ஆர்வத்துடன் நுாலகம் வரும் வாசகர்கள், ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இது குறித்து, கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் (பொறுப்பு) ராஜேந்திரன் கூறியதாவது:


இப்போது நுாலகங்களுக்கு நுால்கள் கொள்முதல் செய்வதில், புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. இணையத்தளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, துறை சார்ந்த நிபுணர்கள், படைப்பாளர்கள் மற்றும் வாசகர் வட்டங்கள் பரிந்துரைகள் வாயிலாக, நுால்களை தேர்வு செய்து வாங்கும் முறை பின்பற்றப்படுகிறது.

கோவை மாவட்ட மைய நுாலகத்துக்கு ஐந்து லட்சம் ரூபாயும், முழு நேரம் செயல்படும் கிளை நுாலகங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், பகுதி நேர நுாலகங்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும் கிராமப்புற நுாலகங்களுக்கு, 75 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான நுால்கள் கேட்டு, ஆன்லைனில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

நுாலகங்களுக்கு தேவையான புதிய நுால்கள் வாங்கப்பட்டு விட்டதாக, பொது நுாலகத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில், அனைத்து நுாலகங்களுக்கும் புதிய நுால்கள் வந்து விடும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us