UPDATED : ஆக 15, 2025 12:00 AM
ADDED : ஆக 15, 2025 11:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அரசு தேர்வுகள் இயக்குநராக பணியாற்றிய லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது இடத்திற்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில், இணை இயக்குநராக பணியாற்றிய சசிகலா, பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர் சுகன்யா, பதவி உயர்வுடன், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார்.

