தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; ஆசிரியருக்கு கூடுதல் பணிச்சுமை

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; ஆசிரியருக்கு கூடுதல் பணிச்சுமை

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; ஆசிரியருக்கு கூடுதல் பணிச்சுமை


UPDATED : நவ 16, 2026 10:52 AM

ADDED : நவ 16, 2026 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 10:52 AM ADDED : நவ 16, 2026 10:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்:
மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல், கூடுதல் பணிச்சுமையை ஆசிரியர்கள் மீது சுமத்துவதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுதும், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கிராமங்கள்தோறும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பணிகளை கண்காணித்து, செயலியில் பதிவேற்றம் செய்யும் பொறுப்பு, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டார செயலர் ஸ்ரீதர் கூறியதாவது:


ஏற்கனவே பல்வேறு மொபைல்போன் செயலிகள் வாயிலாக ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. தற்போது, புதிய பாரத எழுத்தறிவு திட்டப் பணிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தன்னார்வலர்கள் செயலியில் நுழைந்து விபரங்களை பதிவேற்றுவதற்கான வழிமுறைகூட முறையாக உருவாக்கப்படாததால், செயல்பாடுகள் முடங்கியுள்ளன. ஏற்கனவே அறிவொளி இயக்கம், இரவுப்பள்ளி போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், தற்போது அனைத்து பணிகளும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தன்னார்வலர்களுக்கு மாதம், 250 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, இப்பணிகளை தனியார் வசம் ஒப்படைத்து, வயது வந்தோர் கல்வித்திட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் மீது கூடுதல் பணிச்சுமையை சுமத்துவதை மத்திய, மாநில அரசுகள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us