UPDATED : செப் 01, 2026 05:48 PM
ADDED : செப் 01, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
15 வயதுக்கு மேற்பட்ட, எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு வழங்கும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம் தன்னார்வலர்களை உருவாக்கி, கற்பித்தல் மையங்கள் வாயிலாக எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு பயிற்சி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்கான கற்றல், கற்பித்தல் பயிற்சி, அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள், திட்டம் மற்றும் அடுத்தகட்ட பணிகள் குறித்து விளக்கினர். மாவட்டம் முழுவதும் 14 ஒன்றியங்களில், 560 தன்னார்வலர்கள் மூலம் விரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
