மின் கோபுரங்கள் சாய்ந்தால், விரைவாக புனரமைக்கும் புதிய திட்டம்!
மின் கோபுரங்கள் சாய்ந்தால், விரைவாக புனரமைக்கும் புதிய திட்டம்!
UPDATED : ஆக 01, 2025 12:00 AM
ADDED : ஆக 01, 2025 08:59 AM

சென்னை:
மின் கோபுரங்கள் சாய்ந்தால், சில நாட்களிலேயே மின்சாரம் புனரமைக்கும் புதிய திட்டத்தை ஐஏசி நிறுவனத்துடன் ஐஐடி எஸ்.இ.ஆர்.சி ஒப்பந்தம் செய்துள்ளது.
மின்வினியோக கோபுரங்கள் புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளால் சாயும் போது அதை சரி செய்ய நீண்ட நாட்களாகும். இந்த சவாலுக்கு தீர்வாக, சென்னை ஐஐடி ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டட பொறியியல் ஆராய்ச்சி மையமான எஸ்இஆர்சி, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தொழில்நுட்பமான எமர்ஜென்சி ரிட்ரீவல் சிஸ்டம் எனப்படும் சாதனம், 2 - 3 நாட்களில் மின் சேவையை மீட்டெடுக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தை கொல்கத்தாவை சேர்ந்த ஐஏசி எலெக்ட்ரிகல்ஸ் பைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எஸ்இஆர்சி லைசென்சிங் ஒப்பந்தம் செய்து வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், எஸ்இஆர்சி இயக்குநர் ஆனந்தவல்லி மற்றும் ஐஏசி நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் கெம்பராஜு ஆகியோர் பங்கேற்றனர்.
இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகு பவர் லைன் கோபுரங்கள் சேதமடைந்தால், அவற்றை மீண்டும் அமைக்க வாரங்கள் ஆகும். ஆனால், இந்த இஆர்எஸ் சாதனம் மூலம் ஒரே நாளில் விரைவாக அமைக்கக்கூடிய தற்காலிக மின் கோபுரம் உருவாக்க முடியும்.
தற்போது இந்த வகை சாதனங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. விலை அதிகம்; உற்பத்தியாளர்கள் குறைவு. இந்நிலையில் சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி உருவாக்கிய இந்த உள்நாட்டு தொழில்நுட்பம், இறக்குமதிக்கு மாற்றாகவும், மலிவு விலைக்குமான தீர்வாகவும் அமைகிறது. இதன் தயாரிப்பு செலவு வெறும் 40 சதவீதம் மட்டுமே.
நிகழ்ச்சியில் டாக்டர் சதீஷ்குமார், வணிக மேலாண்மை பிரிவு, டாக்டர் பாரிவள்ளல், மேலாண்மை ஆலோசகர், டாக்டர் அனூப், டவர் சோதனை பிரிவு தலைவர், டாக்டர் ஹரிகிருஷ்ணா காற்றழுத்த ஆய்வகத் தலைவர், டாக்டர் ராஜேந்திர ரோகாடே ஆகியோர் கலந்து கொண்டனர்.