தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல் மருத்துவக் கல்லுாரியில் புதிய முதுநிலை படிப்புகள் துவக்கம்

பல் மருத்துவக் கல்லுாரியில் புதிய முதுநிலை படிப்புகள் துவக்கம்

பல் மருத்துவக் கல்லுாரியில் புதிய முதுநிலை படிப்புகள் துவக்கம்


UPDATED : ஜூலை 16, 2026 07:04 PM

ADDED : ஜூலை 16, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 07:04 PM ADDED : ஜூலை 16, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லுாரியில் இரண்டு புதிய முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் துவங்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


புதுச்சேரி, கோரிமேட்டில் மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் அமைந்துள்ளது. தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிறுவனத்தில் இந்த கல்வியாண்டு முதல் பல் சீரமைப்பு துறை, சமுதாய பல் பாதுகாப்புத் துறை ஆகிய இரண்டு துறைகளில் புதிதாக முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் துவங்குவதற்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய பல் மருத்துவ கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளன.

அதன்படி, இந்த கல்வியாண்டு முதல் இரண்டு முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்கை நடைபெற உள்ளது. இதன் மூலம் கல்லுாரியில் அனைத்து பல் மருத்துவ துறைகளிலும் முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் உள்ளன.

இந்த நிறுவனம் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பல் மருத்துவ சிறப்புப் பிரிவுகளிலும் முதுநிலை கல்வியை வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆகவே, மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us