UPDATED : மார் 06, 2025 12:00 AM
ADDED : மார் 06, 2025 10:09 AM

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 'வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தர உறுதி குறித்த மூன்று நாள் பயிற்சி நடந்தது.
பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், இப்பயிற்சியைத் துவக்கி வைத்து பேசுகையில், பாடத்திட்டம் உருவாக்கல், கற்பித்தல் முறை மற்றும் ஆராய்ச்சி முறைகளில் தொடர்ந்து தர நிலையை உறுதிப்படுத்த, புதிய தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய பயிற்சிகள் பேராசிரியர்களுக்கு வழங்குவது அவசியம், என்றார்.
திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் ஜெயகுமார் பேசுகையில், இது போன்ற பயிற்சிகளை பேராசிரியர்களுக்கு அளிப்பதன் மூலம், வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் உயர் தரத்தை எட்ட முடியும், என்றார்.
பல்கலை உயிர் தொழில் நுட்ப மகத்துவ மையத்தின் திட்ட இயக்குனர் மோகன்குமார், பேராசிரியர் பாலசுப்ரமணி, தலைமை நிர்வாக தலைவர் செந்தில் விநாயகம், வேளாண் நானோ தொழில்நுட்ப மைய தலைவர் கோமதி, வேளாண் பூச்சியியல் துறை பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.