தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரவு நேரங்களில் டாக்டர்கள் 'ஆப்சென்ட்'; அவசர சிகிச்சை பிரிவில் தடுமாறும் பயிற்சி டாக்டர்கள்

இரவு நேரங்களில் டாக்டர்கள் 'ஆப்சென்ட்'; அவசர சிகிச்சை பிரிவில் தடுமாறும் பயிற்சி டாக்டர்கள்

இரவு நேரங்களில் டாக்டர்கள் 'ஆப்சென்ட்'; அவசர சிகிச்சை பிரிவில் தடுமாறும் பயிற்சி டாக்டர்கள்


UPDATED : அக் 09, 2026 05:22 PM

ADDED : அக் 09, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 05:22 PM ADDED : அக் 09, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இல்லாததால், அவசர சிகிச்சை பிரிவு பயிற்சி டாக்டர்கள் தடுமாறி வருகின்றனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 880 படுக்கை வசதி கொண்டது. தினமும், 1,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு, இரவு நேரத்தில் டாக்டர்கள் இருப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது.

விபத்தில் சிக்குபவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டு, முதலுதவி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுகின்றனர்.

இந்த பிரிவில், பொது மருத்துவர், பொது அறுவை சிகிச்சை நிபுணர், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் என மூன்று டாக்டர்கள் 'ஷிப்ட்' முறையில், 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.

ஆனால், இரவு நேரங்களில் இந்த மூன்று டாக்டர்களும் பணியில் இருப்பதில்லை. மாறாக, பயிற்சி டாக்டர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் போதிய அனுபவம் இன்றி, சிகிச்சை அளிக்க முடியாமல் திணறுகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் தலைக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு டாக்டர் நியமிக்கப்படவில்லை. விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து வருவோர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் டியூட்டி டாக்டர்கள் இல்லாததால், மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை நீடிக்கிறது. இரவு நேரங்களில் முக்கிய பிரிவுகளில் டாக்டர்கள் பணிபுரிகிறார்களா என்பதை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் பாரதிமோகன் கூறுகையில், 'இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இல்லாதது குறித்து, உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us