sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நிர்மலா திறமைசாலி: ஆசிரியர் பெருமிதம்

/

நிர்மலா திறமைசாலி: ஆசிரியர் பெருமிதம்

நிர்மலா திறமைசாலி: ஆசிரியர் பெருமிதம்

நிர்மலா திறமைசாலி: ஆசிரியர் பெருமிதம்


UPDATED : செப் 23, 2024 12:00 AM

ADDED : செப் 23, 2024 04:07 PM

Google News

UPDATED : செப் 23, 2024 12:00 AM ADDED : செப் 23, 2024 04:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
பள்ளிக்காலத்திலேயே, நிர்மலா சீதாராமன், அனைத்து துறைகளிலும் மிகுந்த திறமை வாய்ந்தவராக விளங்கியதாக, அவரது பள்ளி ஆசிரியர் நினைவு கூர்ந்தார்.

புதுச்சேரியில் நடந்த இலக்கிய திருவிழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். விழாவில் அவருடைய பள்ளி ஆசிரியர் சபிதா, பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். அவரது காலில் மத்திய அமைச்சர் விழுந்து ஆசி பெற்றார்.

பின்னர், முன்னாள் ஆசிரியர் சபிதா கூறியதாவது:

கடந்த, 1974-76ம் ஆண்டு காலகட்டத்தில், திருச்சி, ஹோலி கிராஸ் பள்ளியில், நான் ஆசிரியராக பணிபுரிந்தேன். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னிடம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்தார். நான் அவருக்கு சமூக அறிவியல், வரலாறு, புவியியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தேன்.

அவர் அப்போதே, பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி - வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார். ஒரு வினாடி - வினா போட்டியில், மிசா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பள்ளி மாணவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. அந்த கேள்விக்கு, சரியான பதில் அளித்த ஒரே மாணவி, நிர்மலா சீதாராமன் மட்டுமே.

அவர் பதில் சொன்னதற்கு முதல் நாள் தான், அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அந்த விஷயமும், அன்றைய நாள் காலையில் செய்தித்தாளில் தான், வெளியாகி இருந்தது. அந்தளவிற்கு பள்ளிக்காலத்திலேயே, பொது அறிவில் சிறந்து விளங்கியவர். அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

முன்னதாக, சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனை பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் சந்தித்தார். அப்போது, திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கக்கோரி மனு அளித்தார்.

வியாபாரிகளுடன் புகைப்படம்
விழா முடிந்து கடற்கரை சாலை அருகில் செல்லும் போது, வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையில் இறங்கி நடந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அங்கு இளநீர், துணிப்பை வியபாரம் செய்யும் பெண்களை சந்தித்து பேசி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.






      Dinamalar
      Follow us