தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/30 ஆயிரம் பேர் பார்வையிட்ட நிட்டெக் கண்காட்சி நிறைவு

30 ஆயிரம் பேர் பார்வையிட்ட நிட்டெக் கண்காட்சி நிறைவு

30 ஆயிரம் பேர் பார்வையிட்ட நிட்டெக் கண்காட்சி நிறைவு


UPDATED : மார் 10, 2026 12:34 PM

ADDED : மார் 10, 2026 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2026 12:34 PM ADDED : மார் 10, 2026 12:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
'நிட்டெக் - 2026' பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சியில், நான்கு நாளில், 30 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். மொத்தம், 800 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது.

'ஹை டெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர்' சார்பில், 18வது 'நிட்டெக்' கண்காட்சி, கடந்த 6ம் தேதி துவங்கி, நான்கு நாட்கள் நடந்தது. திருமுருகன்பூண்டி ரிங்ரோட்டில் உள்ள ஹைடெக் வளாகத்தில் நடந்த கண்காட்சியில், 18 நாடுகளை சேர்ந்த முன்னணி இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன.

'நிட்டிங்' துவங்கி பேக்கிங் வரையில் என, நிட்டிங், பிரின்டிங், சாய ஆலை, காம்பாக்டிங், எலாஸ்டிக் உற்பத்தி இயந்திரங்கள், நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்கள், நவீன 'பேப்ரிக்' உற்பத்தி இயந்திரங்கள், நுாலில் இருந்து நேரடியாக ஆடையாக உருவாக்கும் நவீன நீட்டிங் மெஷின்கள், ஆடை உற்பத்திக்கான உபபொருட்கள், மதிப்பு கூட்டு பொருட்கள் என, நான்கு கி.மீ., துாரத்தில் அமைக்கப்பட்ட 'ஸ்டால்'கள், ஒவ்வொரு வாடிக்கையாளின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளன.

கண்காட்சி மட்டுமல்லாது, தொழில் துறையினர் பயன்பெறும் வகையில், புதிய இயந்திர அறிமுகம், ஆக்கப்பூர்வமான பசுமை சார் உற்பத்தி மற்றும் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியின் அவசியம் குறித்த கலந்துரையாடல்களும் நடந்துள்ளன. நான்கு நாட்கள் நடந்து முடிந்துள்ள, 'நிட்டெக் - 2026' கண்காட்சி, திருப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டியாகவும் அமைந்துள்ளதாக, ஒட்டுமொத்த தொழில் துறையினரும் வரவேற்றுள்ளனர்.

'நிட்டெக்' கண்காட்சி தலைவர் ராயப்பன் கூறியதாவது:


நான்கு நாள் நடந்து முடிந்துள்ள, 'நிட்டெக்' கண்காட்சியை, 30 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவியரும் பார்வையிட்டு விசாரித்தனர். திருப்பூர் பின்னலாடை தொழில் துறையை சேர்ந்த, அனைத்து பிரிவினரும் பங்கேற்றனர். கடைசி நாளில் கூட அதிக வர்த்தக விசாரணை நடந்துள்ளது. மொத்தம், 800 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது.

கண்காட்சியை பார்வையிட்ட தொழில் துறையினருக்கு, புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் பயனுள்ளதாக இருந்தன. காட்சிப்படுத்திய நிறுவனங்களுக்கு, எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக விற்பனையும் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us