sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ரூ.12,447 கோடி வருவாய் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை

/

ரூ.12,447 கோடி வருவாய் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை

ரூ.12,447 கோடி வருவாய் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை

ரூ.12,447 கோடி வருவாய் ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை


UPDATED : பிப் 12, 2026 02:12 PM

ADDED : பிப் 12, 2026 02:15 PM

Google News

UPDATED : பிப் 12, 2026 02:12 PM ADDED : பிப் 12, 2026 02:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி:
என்.எல்.சி., இந்தியா குழுமம், நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் எப்போதும் இல்லாத அளவில், மொத்த வருவாயாக ரூ.12,447.07 கோடியை ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

இது குறித்து நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறியதாவது:

என்.எல்.சி., இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் 9 மாத காலத்திற்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், என்.எல்.சி., இந்தியா குழுமத்தின் இயக்க செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட ரூ. 7,562.63 கோடியுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் ரூ. 7,945.59 கோடியாக உயர்ந்துள்ளது.

என்.எல்.சி., நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் நடப்பு நிதியாண்டில் ரூ.1,281.59 கோடியாக அதிகரித்துள்ளது.

வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தீர்த்தலுக்கு முன்னதான மொத்த வருவாய் ரூ. 3,239.80 கோடியாக பதிவாகியுள்ளது.

என்.எல்.சி., நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ. 18,535.20 கோடியாக உயர்ந்துள்ளது. மின்சார கட்டண நிலுவைத் தொகை வசூலிப்புத் திறன் கடந்தாண்டு இறுதி வரை, 118. 96 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் ஒன்பது மாதங்களில், என்.எல்.சி., இந்தியா நிறுவனம், ஒட்டுமொத்தமாக 20,543.12 மில்லியன் யூனிட் மின் உற்பத்தியை எட்டி சாதனை படைத்துள்ளது.

இதில் 1,595.95 மில்லியன் யூனிட் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், என்.எல்.சி., இந்தியா குழுமத்தின் இயக்க செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ரூ.12,447.07 கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

என்.எல்.சி., இந்தியா குழுமத்தின் வரிக்கு பிந்தைய லாபம் நடப்பு நிதியாண்டில் ரூ.2,288.02 கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்தாண்டு டிச.,31ம் தேதியுடன் முடிவடைந்த முதல் 9 மாத கால அளவில், என்.எல்.சி., இந்தியா குழுமத்தின் நிகர மதிப்பு ரூ.20,639.91 கோடியாக உயர்ந்து என்.எல்.சி., வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us