ஐ.ஐ.எம்.,கல்வி நிறுவனத்துடன் என்.எல்.சி., புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஐ.ஐ.எம்.,கல்வி நிறுவனத்துடன் என்.எல்.சி., புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : செப் 20, 2024 12:00 AM
ADDED : செப் 20, 2024 06:05 PM

நெய்வேலி:
என்.எல்.சி., மற்றும் கொல்கத்தா இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் இடையே, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
என்.எல்.சி., மூத்த நிர்வாகிகளுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை வழங்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தர மேலாண்மை அமைப்புகளில், மூத்த நிர்வாகிகளின் திறன்கள் மற்றும் தலைமைத்துவ திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும். மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும.
கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில், என்.எல்.சி., செயல் இயக்குனர் பிரபு கிஷோர் மற்றும் ஐ.ஐ.எம்., நிறுவன மேலாண்மை மேம்பாட்டு திட்ட இயக்குனர் சுதர்சன் குமார் ஆகியோருக்கிடையே கையெழுத்தானது.
நிகழ்ச்சியில், என்.எல்.சி., கற்றல் மற்றும் மேம்பாட்டு மைய பொது மேலாளர் சரவணபவன், துணை பொது மேலாளர் பாண்டியன், ஆலோசகர் டாக்டர் சதீஷ் பாபு மற்றும் கொல்கத்தா மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில், அதன் கல்வித்துறை தலைவர் ராஜேஷ் பாபு, ஆலோசனை மற்றும் மக்கள் மேம்பாட்டு நிறுவன தலைவர் ஷிலாதித்யா சென்பாரத், மக்கள் மேம்பாட்டு நிறுவன பேராசிரியர் விமல்குமார் கலந்து கொண்டனர்.