UPDATED : ஜன 11, 2026 02:11 PM
ADDED : ஜன 11, 2026 02:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழகத்தில் அரசு அரசு உதவி பெறும் பணிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி திட்ட தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) நேற்று நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில், 27 தேர்வு மையங்களில், 6,662 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், 133 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். 98 சதவீத மாணவர்கள் எழுதினர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் என, பிளஸ் 2 படிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படும். ஈரோடு கலெக்டர், கந்தசாமி, சித்தோடு அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை, ஆய்வு செய்தார்.

