தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.எம்.எம்.எஸ்., தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

என்.எம்.எம்.எஸ்., தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

என்.எம்.எம்.எஸ்., தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!


UPDATED : நவ 03, 2026 10:44 AM

ADDED : நவ 03, 2026 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 10:44 AM ADDED : நவ 03, 2026 10:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
நடப்பு 2026 - 2027ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்குத் தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த அக்., 23ம் தேதி அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் தங்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக இணையவழியில் விண்ணப்பிக்க கடந்த அக்., 26ம் தேதி பிற்பகல் முதல் நவ., 3ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கிலும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேலும் நீட்டித்துள்ளது.

இதன்படி, மாணவர்கள் வரும் நவம்பர் 13ம் தேதி வரை தங்களது பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us