தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/80 அரசு உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., இல்லை; 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு பின்தங்கும் நிலை

80 அரசு உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., இல்லை; 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு பின்தங்கும் நிலை

80 அரசு உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., இல்லை; 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு பின்தங்கும் நிலை


UPDATED : நவ 16, 2026 03:42 PM

ADDED : நவ 16, 2026 03:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 03:42 PM ADDED : நவ 16, 2026 03:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், ஈரோடு மாவட்ட அரசு உயர்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால், பொது தேர்வை வழிநடத்துவது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நெருங்கிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட அரசு உயர்நிலை பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இது நிர்வாக ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் இல்லாத சூழலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவ,மாணவிகளை தயார்படுத்துவது கேள்விக்குறியாகி வருகிறது.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: ஜூன் மாதமே கவுன்சலிங்கில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மாறாக தாமதமாகவே இந்தாண்டு கவுன்சிலிங் துவங்கியது. ஆனால் நீதிமன்ற உத்தரவால், அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை, கவுன்சிலிங் மூலம் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் இருக்கும் பட்சத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை, பாட ஆசிரியர்களை வழிநடத்தி, 100 சதவீத தேர்ச்சியை பெற வைக்க வழிவகை செய்ய இயலும். தற்போது உதவி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளியில் சீனியர் ஆசிரியரே, தலைமை ஆசிரியர் பொறுப்பில் உள்ளார். இதனால் இந்த பணியுடன் வகுப்பாசிரியர் பணியையும் கூடுதலாக பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பணிச்சுமையால் கவனக்குறைவு, கவன சிதறல் ஏற்படுகிறது. இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் கடந்தாண்டை போல் இந்தாண்டும், 10ம் வகுப்பு பொது தேர்வில் ஈரோடு மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின்தங்கும் சூழல் காணப்படுகிறது. எனவே உயர்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில், 80 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

இவ்வாறு கூறினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us