UPDATED : ஜூன் 01, 2026 09:45 AM
ADDED : ஜூன் 01, 2026 09:46 AM
அ நிறம் | அளவு
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கான காரணத்தை கண்டறியும் எண்ணம் கூட மத்திய அரசுக்கு இல்லை. நம் நாட்டின் கல்வி அமைப்பு முழுமையாக மாபியாக்களின் பிடியில் சிக்கியுள்ளது. ஒருவர் மட்டும் தனித்து செயல்பட்டால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. நாட்டிற்கு ஒரு கல்வியறிவு பெற்ற பிரதமர் தேவை.
- அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி கட்சி.
சீர்குலைவு!
தங்களை விஸ்வகுரு என பறைசாற்றுவோரால், நீட், சி.பி.எஸ்.இ., என ஒரு தேர்வைக்கூட முறையாக நடத்த முடியவில்லை. பிரதமர் மோடி, ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் முழுமையாக சீர்குலைத்துவிட்டார். தன் அரசை பற்றிய அக்கறை மட்டுமே அவருக்கு உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பற்றிய அக்கறை இல்லை.
- ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்.
