UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 10:17 AM

கோவை:
பள்ளிகள் திறக்கும் முன், ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என தனியார் பள்ளி மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் செந்தில்குமார், தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் வரும் 10ம் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என, மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி உள்ளனர். இந்த ஆன்லைன் வகுப்புகளில், மாணவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட தனியார் தொடக்கப்பள்ளிகள் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், பள்ளிகள் திறக்கும் முன், ஆன்லைன் வகுப்புகள் நடத்தத்கூடாது என, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.