UPDATED : மே 22, 2026 05:15 PM
ADDED : மே 22, 2026 05:17 PM
திருப்பூர்:
திருப்பூரில், 12 மாநகராட்சி பள்ளிகள் இருந்தும் ஒரு பள்ளி கூட நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை எட்டவில்லை.
மாநகராட்சியின், 13 பள்ளிகளை சேர்ந்த, 890 மாணவர், 1,772 மாணவியர், 2,662 பேர் தேர்வெழுதினர். 788 மாணவர், 1,669 மாணவியர் என, 2,457 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர்களில், 102 பேரும், மாணவியரில், 103 பேரும் என, 205 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவர் தேர்ச்சி சதவீதம், 88.54, மாணவியர் தேர்ச்சி சதவீதம், 94.19. மொத்த தேர்ச்சி சதவீதம், 92.30.
கடந்த, 2025ல், ஒரு மாநகராட்சி பள்ளி கூட சென்டம் பெறாத நிலையில், நடப்பு ஆண்டிலும் மாநகராட்சி பள்ளிகள் சென்டம் தரவில்லை. அதே நேரம், கடந்த முறை, 90.70 வாக இருந்த மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் இம்முறை, 92.30 வாக உயர்ந்து ஆறுதல் அளித்துள்ளது.
குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தேர்வெழுதிய, 241 பேரில், நான்கு பேர் தேர்ச்சி பெறவில்லை. கருவம்பாளையம் பள்ளியில், 114 பேரில், நான்கு பேரும், குமரானந்தபுரம் மாநகராட்சி பள்ளியில், 72 பேரில், மூன்று பேரும், நெசவாளர்காலனி, 151 பேரில், ஒன்பது பேரும், பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில், 382 பேரில், 20 பேரும் தேர்ச்சி பெறவில்லை.
கே.வி.ஆர். நகர் பள்ளியில், 74 பேரில், ஐந்து பேரும், நொய்யல் வீதி பள்ளியில், 137 பேரில், பத்து பேரும், ஜெய்வாபாய் பள்ளியில், 691 பேரில், 55 பேரும், பத்மாவதிபுரம் பள்ளியில், 148 பேரில், 21 பேரும், சின்னச்சாமி அம்மாள் பள்ளியில், 157 பேரில், 34 பேரும், நஞ்சப்பா பள்ளியில், 194 பேரில், 31 பேரும் தேர்ச்சி பெறவில்லை.
புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு, 221 பேர் தேர்வெழுதி, மூன்று பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 98.64. நடப்பு ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவில் நுாறு சதவீத தேர்ச்சியை தந்த இப்பள்ளி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவிலும், நுாறு சதவீத தேர்ச்சியை தருமென எதிர்பார்க்கப்பட்டது.
தேர்வெழுதிய, 195 மாணவிகளில் ஒரு மாணவி மட்டும் தேர்ச்சி பெற முடியவில்லை. 194 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதனால், 99.49 சதவீதத்தை இப்பள்ளி இம்முறை பெற்றுள்ளது.
