UPDATED : பிப் 22, 2025 12:00 AM
ADDED : பிப் 22, 2025 10:32 AM
சென்னை:
சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், சிறந்த சமய நுால்களுக்கு வழங்கப்படும் சேக்கிழார் விருதுக்கு, நுால்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மையத்தின் செயலர் சிவாலயம் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், முத்துமணி துரைசாமி - துரைசாமி அறக்கட்டளை இணைந்து, சிறந்த நாவல்களுக்கான சேக்கிழார் விருதை வழங்குகின்றன. இவ்விருது பெற, கடந்த ஏப்ரல் முதல் அடுத்த மாதம் வரை வெளியான, சமயம் சார்ந்த முதல் பதிப்பு நுால்கள் தகுதியானவை.
அவற்றின் மூன்று பிரதிகளை, ஏப்., 15க்குள், கே.துரைசாமி, மூத்த வழக்கறிஞர், அறங்காவலர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம், 54, வெங்கடகிருஷ்ணா சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 02 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வாகும் நுால்களுக்கு, முதல் பரிசாக, 25,000; இரண்டாம் பரிசாக 15,000; மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

