UPDATED : மார் 15, 2025 12:00 AM
ADDED : மார் 15, 2025 11:23 AM
சென்னை:
சவுதி அரேபியாவில், பெண் செவிலியர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், பி.எஸ்.சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற, 35 வயதுக்கு உட்பட்ட, பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.
இவர்களுக்கான நேர்காணல், ஏப்ரல், 27 முதல் 30ம் தேதி வரை, கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த விபரங்கள், www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள், தங்கள் சுய விவர விண்ணப்ப படிவம், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அனுபவ சான்றிதழ் போன்றவற்றை, ovemclmohsa2021@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, ஏப்ரல், 18ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.