தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அலுவலக உதவியாளர் பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

அலுவலக உதவியாளர் பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

அலுவலக உதவியாளர் பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : பிப் 02, 2026 07:54 PM

ADDED : பிப் 02, 2026 07:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2026 07:54 PM ADDED : பிப் 02, 2026 07:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
வேப்பூர் அரசு தொழிற் நிலையம் அலுவலக உதவியாளருக்கான காலிப்பணியிடம் நேரடி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

காலியிட எண்ணிக்கை 1 ஆகும். விண்ணப்பதாரருக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

படிவம் மற்றும் விவரங்கள் நேரிலோ அல்லது இணையதளத்தில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், எம்.ஆர்.கே., காம்ப்ளக்ஸ், முதல் தளம், பொன்னுசாமி நகர், சேலம் மெயின் ரோடு, வேப்பூர் 600 304 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வரும், 11ம் தேதி கடைசி நாள். குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது.

தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறி விப்புமின்றி ரத்து செய்யவோ வேப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு முழு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us