ஸ்டான்லி மாணவர்களிடம் குறைகள் கேட்டறிந்த அதிகாரிகள்
ஸ்டான்லி மாணவர்களிடம் குறைகள் கேட்டறிந்த அதிகாரிகள்
UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 10:28 AM
சென்னை:
நாடு முழுதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் தொடர் ஆய்வு நடவடிக்கைகளை என்.எம்.சி., மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், 'ராகிங்' தடுப்பு நடவடிக்கைகள், மாணவர்கள் மன நலனை உறுதி செய்யும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், மருத்துவக் கல்லுாரிகளின் கட்டமைப்பு வசதிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதன்படி, என்.எம்.சி.,யின் முதுநிலை கல்வி வாரிய தலைவர் விஜய் ஓஜா தலைமையில் மூவர் அடங்கிய குழுவினர், ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனை வளாகம், கல்லுாரி வளாகம், ஆய்வகம், விடுதி மற்றும் உணவு தயாரிக்கும் அறைகளில் ஆய்வு செய்த, என்.எம்.சி., அதிகாரிகள், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
தொடர்ந்து, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதயும் கேட்டறிந்தனர்.
இதுபோன்ற ஆய்வின்போது, ஸ்டான்லியில் குறைகள் கண்டறியப்பட்டு, கடந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, பின் நிவர்த்தி செய்யப்பட்டதும், சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.