UPDATED : மே 24, 2025 12:00 AM
ADDED : மே 24, 2025 09:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:
ஆத்துார் நகர் பகுதியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு, ஈகோ மினி வேனில், பள்ளி மாணவ, மாணவியர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, இருபுறத்திலும் தலா இரு மாணவியர் என, 4 பேர், இட நெருக்கடியில், பக்கவாட்டு கதவுகளில் அமர்ந்தபடியும், மேற்புற
இரும்பு கம்பியை பிடித்தபடியும் பயணித்தனர்.
இப்படியாக, முல்லைவாடியில் இருந்து, ராணிப்பேட்டை, பஸ் ஸ்டாண்ட், உடையார்பாளையம் வழியே, 3 கி.மீ.,க்கு மேல் பயணித்தனர். ஆபத்தான பயணம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, ஆத்துார் வட்டார போக்குவரத்து துறையினர் விசாரிக்கின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில், வாகனத்தை இயக்கிய டிரைவர், மாணவிகளை அழைத்து வந்தவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

