தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரண்டாம் பருவ பாட புத்தகம், நோட்டுகளை பள்ளிக்கு கொண்டு வர மறுக்கும் அதிகாரிகள்: தவிப்பில் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

இரண்டாம் பருவ பாட புத்தகம், நோட்டுகளை பள்ளிக்கு கொண்டு வர மறுக்கும் அதிகாரிகள்: தவிப்பில் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

இரண்டாம் பருவ பாட புத்தகம், நோட்டுகளை பள்ளிக்கு கொண்டு வர மறுக்கும் அதிகாரிகள்: தவிப்பில் பள்ளி தலைமை ஆசிரியர்கள்


UPDATED : அக் 03, 2026 11:57 AM

ADDED : அக் 03, 2026 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 11:57 AM ADDED : அக் 03, 2026 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
தமிழக பள்ளிகளில் அக்., 5 முதல் இரண்டாம் பருவம் துவங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கான விலையில்லா பாட நுால்கள், நோட்டுப் புத்தகங்களை ஒன்றிய மையங்களில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறையே கொண்டு செல்ல அரசின் வழிகாட்டு நெறிமுறை இருந்தும், பொறுப்பை தட்டி கழிக்கும் கல்வி அலுவலர்களால் தலைமை ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு, நோட்டு புத்தகம், சைக்கிள், புத்தகப் பை, புவியியல் வரைபடம், வண்ண பென்சில்கள், காலணி, அறிவியல் உபகரணம் உட்பட 14 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இவை சி.இ.ஓ., டி.இ.ஓ., பி.இ.ஓ., க்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டும். நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு வழிகாட்டு நெறிமுறை தந்துள்ளது.

மாவட்ட கிடங்கில் இருந்து ஒன்றிய மையத்திற்கும், அங்கிருந்து வரைபடத்தில் உள்ள வழித்தடங்களின் படி பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்பட வேண்டும். இப்பணிகளை செய்ய எவ்வித ஆசிரியர்களையும் ஈடுபடுத்தக் கூடாது. இப்பணிகளை மேற்பார்வை செய்ய உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் எழுத்தரை பயன்படுத்தி அவருடன் தனியாக கூலியாட்களை கொண்டு பணிகளை செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதை மறுத்து தலைமை ஆசிரியர்களை வரவழைத்து கொண்டு செல்ல வைக்கிறது பள்ளிக்கல்வித்துறை. மாநிலம் முழுவதும் இப்பிரச்னை பூதாகரமாகி வருகிறது.

அரசு உத்தரவிட்ட பின்னும் பொருட்களை பெற, ஒவ்வொரு முறையும் வாடகை வாகனங்களை எடுத்துக்கொண்டு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர், கல்வி மாவட்ட தலைநகருக்கு செல்ல கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அப்படியென்றால் ஒதுக்கிய நிதி என்னதான் ஆகிறது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் குணசேகரன் கூறியதாவது:


அரசு உத்தரவிட்ட பின்னும் விதிமீறும் வகையில் பொருட்களை வாங்க ஆசிரியர்களை வரவழைப்பது நியாயமா. எத்தனை முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும். வழிகாட்டு நெறிமுறையை மீறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையினரே பொருட்களை பள்ளிகளில் இறக்கி வைக்க வேண்டும், என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us