UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 10:00 AM
சென்னை:
எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத் திட்டம், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் கல்வித்தரம் உள்ளிட்டவற்றை கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட வாரியாக பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாதம் ஒருமுறையாவது, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்துக்குச் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறையின் செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நுாலக பயன்பாடு, பள்ளி நன்கொடை, பெற்றோர் ஆசிரியர் கழக செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்கர், ஆர்த்தி, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், பள்ளிக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்ற இயக்குனர் உமா, தனியார் பள்ளிகள் துறை இயக்குனர் பழனிசாமி, அரசு தேர்வுகள் இயக்குனர் லதா உள்ளிட்ட, 35 பேருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.