செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
UPDATED : நவ 28, 2026 01:31 PM
ADDED : நவ 28, 2026 01:32 PM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், சந்தித்து கொண்ட நிகழ்வில் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை மற்றும் செங்கல்பட்டு மருத்துவமனை சார்பில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு கல்லுாரி வளாகத்தில் இன்று நடந்தது.
மருத்துவக் கல்லுாரி முதல்வர் பிரியா, முன்னாள் மாணவரும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவரான மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
அதன்பின், மருத்துவ சேவையில் 'மரபுகளின் மாண்பு' என்ற தலைப்பில், மாணவர்களுக்கு மருத்துவர் மோகன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதை தொடர்ந்து மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை முன்னாள் மாணவர் அறக்கட்டளைக்கு வழங்கிப்பட்டது. இந்நிகழ்வில் நுாற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
