தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தகங்கள் படிக்க ஒரு மணி நேரம் போதவில்லை: தினமலர் வாசகர்கள் பெருமிதம்

புத்தகங்கள் படிக்க ஒரு மணி நேரம் போதவில்லை: தினமலர் வாசகர்கள் பெருமிதம்

புத்தகங்கள் படிக்க ஒரு மணி நேரம் போதவில்லை: தினமலர் வாசகர்கள் பெருமிதம்


UPDATED : ஜூன் 29, 2026 09:59 AM

ADDED : ஜூன் 29, 2026 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 09:59 AM ADDED : ஜூன் 29, 2026 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'புத்தகங்கள் படிக்க ஒரு மணி நேரம் போதவில்லை' என, ' தினமலர்' நாளிதழின், 'கடல் தாமரை' புத்தக பூங்கா நுாலகத்தை நேற்று பார்வையிட்ட, வாசகர்கள் பாராட்டினர்.

பெங்களூரு சிவாஜி நகர் குயின்ஸ் சாலையில் உள்ள, 'தினமலர்' அலுவலகத்தின் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, தமிழகம் மதுரை மாவட்டம் சுப்ரமண்யபுரத்தின் ஜெய்ஹிந்த்புரத்தை பூர்வீகமாக கொண்ட புவனேஸ்வரன், 69, அவரது நண்பர் தஞ்சாவூர் மஹாராஜபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 71, வந்திருந்தனர்.

நுாலகத்திற்கு தங்களிடம் இருந்த அபூர்வ புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

பின், புவனேஸ்வரன் கூறியதாவது:

தமிழகத்தில் எந்த 'தினமலர்' அலுவலகத்திலும் இல்லாத ஒரு விஷயத்தை, பெங்களூரு 'தினமலர்' அலுவலகத்தில் துவக்கி உள்ளது சிறப்பாகும். உங்களின் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவிப்பர்.

40 ஆண்டு வாசகரான எனக்கு, தினமலர் நாளிதழின் ஆன்மிகம் பகுதி மிகவும் பிடிக்கும். உள்ளூர் செய்தி முதல் வெளிநாடு செய்திகள் வரை பிடிக்கும். வெள்ளிக்கிழமை வரும் ஆன்மிக மலர் மிகவும் அருமையாக உள்ளது. தினமலர் நாளிதழ் ஹிந்து சனாதனத்திற்கு மிகவும் ஆதரவாக செயல்படுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்றைய இளம் சமுதாயத்தினர் புத்தகம் படிக்க துாண்டும் விதமாக நீங்கள் இருக்க வேண்டும். இத்தகைய நுாலகங்கள் ஒரு இடத்தில் இருப்பதை விட, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்தால், புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டிற்கு பறக்கும் அறுசுவை தகவல்கள்
கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

'கடல் தாமரை' புத்தக பூங்கா நுாலகத்திற்கு வந்ததும், இத்தனை புத்தகங்களா என ஆச்சரியம் அடைந்தோம். ஒரு மணி நேரம் இருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் பல புத்தகங்கள் இருப்பதை பார்த்தேன். அதனை அடுக்கி வைக்க 'மேஜைகள்' தயாராகவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். இளம் தலைமுறையினர், மொபைல் போனில் நேரத்தை செலவிடுவதை விடுத்து, புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் தினமலர் ஆன்மிகமலர் புத்தகத்தை விரும்பி படிப்பேன். நான் முதியவன் என்றாலும், சிறுவர் மலர் புத்தகத்தையும் விரும்புகிறேன். குறிப்பாக சனிக்கிழமைகள் வெளியாகும் அறுசுவை பகுதியில் வரும் சமையல் குறிப்புகளை படம் பிடித்து, வெளிநாடுகளில் இருக்கும் என் மகள்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாரத்தில் ஏழு நாட்களும் காலை 09:30 மணி முதல் இரவு 09:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 83108 60601; 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us