தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எதிர்கால தேவைகளை அறிந்து செயற்கை நுண்ணறிவை கற்க வேண்டும்: சபாநாயகர் பிரபாகர்

எதிர்கால தேவைகளை அறிந்து செயற்கை நுண்ணறிவை கற்க வேண்டும்: சபாநாயகர் பிரபாகர்

எதிர்கால தேவைகளை அறிந்து செயற்கை நுண்ணறிவை கற்க வேண்டும்: சபாநாயகர் பிரபாகர்


UPDATED : செப் 23, 2026 12:19 AM

ADDED : செப் 23, 2026 12:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 12:19 AM ADDED : செப் 23, 2026 12:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை, மேற்கு தாம்பரத்தில் உள்ள, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரியின், 27வது பட்டமளிப்பு விழாவில், சபாநாயகர் பிரபாகர் பங்கேற்று, 1,451 பேருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரியில், ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமையில், 27வது பட்டமளிப்பு விழா நடந்தது.

இதில், தமிழக சட்டசபை சபாநாயகர் பிரபாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில், 1,249 இளநிலை பட்டதாரிகள் மற்றும் 202 முதுநிலை பட்டதாரிகள் என, மொத்தம் 1,451 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். அண்ணா பல்கலை தரவரிசையில் இடம் பிடித்த 35 மாணவர்களுக்கு, சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவிற்கு தலைமை ஏற்ற சாய்பிரகாஷ் லியோமுத்து, சாய்ராம் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, மாணவர்களின் திறன் மேம்பாடு, தொழில்நுட்பக் கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.

சபாநாயகர் பிரபாகர் பேசுகையில், “மறைந்த நண்பரும், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவருமான லியோமுத்து, தொலைநோக்கு சிந்தனையுடன், இந்த கல்வி நிறுவனத்தை உருவாக்கினார்.

அதே போல், மாணவர்களும், எதிர்கால தேவைகளை அறிந்து, அதற்கேற்ப, தங்கள் படிப்புடன், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களையும் கற்க வேண்டும்,” என்றார்.

நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் ராஜா, தகவல் தொடர்பு முதன்மை செயல் அதிகாரி நரேஷ்ராஜ், மாணவர் விவகாரத் துறை டீன் ராஜேந்திரபிரசாத், அறங்காவலர் சதீஷ், வணிக மேலாண்மை கல்லுாரி இயக்குநர் மாறன், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us