எட்டாம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
எட்டாம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
UPDATED : ஜூன் 26, 2025 12:00 AM
ADDED : ஜூன் 26, 2025 08:58 AM
சென்னை:
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் எட்டாம் வகுப்பு தனித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 10ம் தேதி தொடங்குகிறது.
ஜூலை 10 முதல் 17 வரை அரசு இணையதளமான www.dge.tn.gov.in மற்றும் தேர்வு சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.195. இத்தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஜூலை 18, 19 ஆகிய தேதிகளில் ரூ.500 அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுகள் ஆகஸ்டு 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள், கடந்த தேர்வு சான்றிதழ் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு: www.dge.tn.gov.in இணையதளத்தைப் பார்க்கவும்