UPDATED : நவ 10, 2025 07:49 AM
ADDED : நவ 10, 2025 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, வணிக கல்வி குறித்து, இலவச 'ஆன்லைன்' படிப்பு கற்பிக்கப்பட உள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், தேசிய அளவிலான பாடத்திட்டங்களை வடிவமைக்கும் அமைப்பாக செயல்படுகிறது. தற்போது, 'ஸ்வயம்' இணையதளம் வழியே, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, வணிக கல்வி தொடர்பாக இலவச ஆன்லைன் கல்வி வழங்க, என்.சி.இ.ஆர்.டி., திட்டமிட்டுள்ளது.
இது, மொத்தம் 24 வார படிப்பாகும். நிர்வாக தன்மை, மேலாண்மை கொள்கை, திட்டமிடல், வணிகச் சூழல் உட்பட எட்டு பிரிவுகளில் பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளன. இதற்காக மாணவர்கள், https://swayam.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

