தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐந்தாம் வகுப்பு வரை 'ஆன்லைன்' வகுப்பு: கல்வி இயக்குனரகம் உத்தரவு

ஐந்தாம் வகுப்பு வரை 'ஆன்லைன்' வகுப்பு: கல்வி இயக்குனரகம் உத்தரவு

ஐந்தாம் வகுப்பு வரை 'ஆன்லைன்' வகுப்பு: கல்வி இயக்குனரகம் உத்தரவு


UPDATED : நவ 10, 2026 09:03 AM

ADDED : நவ 10, 2026 09:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:03 AM ADDED : நவ 10, 2026 09:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
தலைநகர் டில்லியில் காற்று மாசு அபாயகரமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை, 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

டில்லி அரசின் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:

டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மிகவும் மோசமான நிலையில் இருந்த காற்று மாசு, தற்போது அபாயகரமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால், காற்றில் மாசு மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகளை நடத்த வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறையை தொடர வேண்டும். டில்லி மாநகராட்சி, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் மற்றும் டில்லி கன்டோன்மென்ட் நடத்தும் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

மத்திய காற்று தர மேலாண்மை ஆணைய பரிந்துரைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏற்பாடு குறித்து பெற்றோர் மற்றும் மாணவ மாணவியரின் பாதுகாவலர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட, மண்டல கல்வி அதிகாரிகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று இந்த உத்தரவு செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அபாய நிலை


தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு டில்லியில் காற்று தரக்குறியீடு, 364 ஆக பதிவாகி இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுவே, நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு, 382 ஆக இருந்தது.

டில்லியில் உள்ள 59 காற்றுத் தர கண்காணிப்பு மையங்களில், 18 இடங்களில் நேற்று காலை காற்று தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது.

டில்லியில் இன்று, காற்று மாசு அபாயகரமான நிலையை தாண்டும் என, டில்லிக்கான காற்று தர எச்சரிக்கை அமைப்பு முன்கூட்டிய கணித்துள்ளது. வெப்பநிலை இயல்பை விட குறைவாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us