UPDATED : அக் 15, 2025 06:18 AM
ADDED : அக் 15, 2025 06:18 PM

உத்தரகண்ட்:
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில், வேத சாஸ்திரங்களை பயின்று முறைப்படி சன்னியாச தீட்சை பெற்றவர், சுவாமி சதேவானந்த சரஸ்வதி. பல பத்திரிகைகளில் ஆன்மிக கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இவர், ஆன்லைனில் தமிழ் ஆன்மிக வகுப்புகளை டிசம்பர், 4ம் தேதி துவங்க உள்ளார்.
இந்த ஆன்மிக வகுப்பில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள்:
*ஆன்மிகத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
*தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த, 25 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
*விண்ணப்ப பரிசீலனைக்கு பின், முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும்.
*வாரத்தில் ஐந்து நாட்கள், தலா ஒரு மணி நேர வீதம், தினமும் மூன்று வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
* முன்பதிவு செய்து கொள்பவர்கள் அனைத்து வகுப்புகளிலும் கட்டாயம் பங்கேற்பது மிக அவசியம்..
ஆன்லைனில் வகுப்புகளை நடத்த தேவையான சாதனங்களை வாங்கி பராமரிப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய, ஒவ்வொருவரும் பிரதி மாதம், 750 ரூபாய்- நன்கொடை செலுத்த வேண்டும்.
நேரடி பயிற்சி
*ஆஸ்ரம சூழலில் ஆன்மிக சாதனைகள் செய்து, தெய்வீக அனுபவங்களை பெற வசதியாக திருவண்ணாமலை, காசி, ரிஷிகேஷ் மற்றும் பல ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களில் நேரடி பயிற்சி வகுப்புகளும், 10 முதல், 15 நாட்கள் வரை நடத்தப்படும். இதற்கு தனியாக நன்கொடை செலுத்தி மூன்று மாதங்களுக்கு முன், முன் பதிவு செய்ய வேண்டும்.
இந்த பயிற்சி வகுப்புகளுக்கான முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு sriagas.rksh@gmail.com என்ற இ-மெயில் முகவரி மற்றும் 88659 90846 என்ற மொபைல் எண்ணில், வாட்ஸ்ஆப் மூலமாக தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு செய்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்.