UPDATED : அக் 23, 2025 08:24 AM
ADDED : அக் 23, 2025 08:24 AM
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கன மழை காரணமாக, 20 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு பின் நேற்று பள்ளிகள் திறந்தன.
இந்நிலையில் நேற்று காலை அந்தியூர் மற்றும் டி.என். பாளையம் பகுதிகளில் கன மழை பெய்தது. மழையால் மாணவ, மாணவியர் வந்து செல்வதில் சிரமம் இருப்பது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சுப்பாராவ், கலெக்டர் கந்தசாமிக்கு தெரிவித்தார். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்து விடுமுறை அளிக்கலாம். இதற்கு மாற்றாக மற்றொரு நாளில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இதன்படி கன மழை பாதிப்புக்கு உட்பட்ட 20 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.