UPDATED : ஜன 22, 2025 12:00 AM
ADDED : ஜன 22, 2025 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறையின் மூன்று கட்ட அகழாய்வுகளை தொடர்ந்து, தமிழக தொல்லியல் துறை, தற்போது வரை பலகட்ட அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
தொல்பொருட்களை பூமிக்குள் இருந்த நிலையிலேயே காட்சிப்படுத்தும் வகையில், திறந்தநிலை அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை, தமிழக தொல்லியல் துறை செய்துள்ளது. இம்மாத இறுதிக்குள் அதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, கங்கைகொண்ட சோழபுரத்தில், சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.