UPDATED : அக் 31, 2024 12:00 AM
ADDED : அக் 31, 2024 11:23 AM

மேட்டுப்பாளையம்
: சிறுமுகை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் திறக்கப்பட்டன.
காரமடை ஊராட்சி ஒன்றியம், சிறுமுகை அருகே இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட, எஸ். புங்கம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 32.80 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன.
இதன் திறப்பு விழாவுக்கு இலுப்பநத்தம் ஊராட்சி தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை, கிருஷ்ணவேணி வரவேற்றார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார். இந்த விழாவில் காரமடை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மணிமேகலை, மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் ஸ்டெல்லா, பத்மா மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர். ஒப்பந்ததாரர் சரவணன் நன்றி கூறினார்.