UPDATED : ஏப் 24, 2025 12:00 AM
ADDED : ஏப் 24, 2025 05:11 PM

சென்னை:
ஓப்போ நிறுவனம், வலிமையான கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய ஏ5 புரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.17,999 விலையில் வரும் இந்த மாடல், ஐபி66, ஐபி68, ஐபி69 தரச்சான்றுகளுடன் தூசி, தண்ணீர் மற்றும் கீழே விழுதல்களுக்கு எதிர்ப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ப்ளாஷ் டச் தொழில்நுட்பம் மூலம் ஈரமான அல்லது எண்ணெய் கைகளால் கூட திரையை எளிதில் பயன்படுத்த முடியும்.
இந்த போன் 120ஹெர்ட்ஸ் அல்ட்ரா ப்ரைட் டிஸ்பிளே, 5,800mAh பேட்டரி, 45W விரைவு சார்ஜிங், மற்றும் மீடியா டெக் டைமென்சிட்டி 6300 சிப் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. 50MP கேமரா மற்றும் நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளடக்கியது.
அமேசான், பிளிப்கார்ட், ஓப்போ ஸ்டோர் மற்றும் ஆப்லைன் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. வாங்குபவர்களுக்கு ரூ.1500 வரை கேஷ்பேக் மற்றும் 6 மாதங்கள் வரை வட்டி இல்லாத இஎம்ஐ சலுகை வழங்கப்படுகிறது.

