UPDATED : மே 24, 2024 12:00 AM
ADDED : மே 24, 2024 11:43 AM
நாமக்கல்:
நுாலகத்தை பராமரிக்க, பணியாளர்களுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மற்றும் மோகனுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், நேற்று கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.
மோகனுார் பேரூராட்சியில், போட்டி தேர்வுகளுக்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டார். நுாலகத்தை சரியாக பயன்படுத்தி, அரசு தேர்வுகளில் வெற்றி பெற மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். நுாலகத்தை முறையாக பராமரிக்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
மோகனுார் பேரூராட்சியில் சுகாதார நிலையம் அமைப்பதற்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், மரூர்பட்டியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.