sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பள்ளிகளை தத்தெடுக்க உத்தரவு

பள்ளிகளை தத்தெடுக்க உத்தரவு

பள்ளிகளை தத்தெடுக்க உத்தரவு


UPDATED : நவ 15, 2024 12:00 AM

ADDED : நவ 15, 2024 09:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2024 12:00 AM ADDED : நவ 15, 2024 09:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளை தத்தெடுத்து, கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும் என, மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் ஒவ்வொருவரும், அவர்கள் சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருடன் ஆலோசித்து, ஒவ்வொருவரும் இரண்டு அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்.

அந்த பள்ளிகளுக்கு மாதம் இருமுறை சென்று, பள்ளி வளாக துாய்மை, வகுப்பறையில் கற்பிக்கும் நடைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மாணவர்கள் - ஆசிரியர்கள் அணுகுமுறை, கற்பித்தலுக்கான கருவிகளை பயன்படுத்தும் விதம் உள்ளிட்டவற்றை கண்காணித்து, அந்த பள்ளியின் மேம்பாட்டுக்கான விஷயங்களை, தலைமை ஆசிரியருக்கு எடுத்துரைத்து முன்னேற்ற வேண்டும்.

அவ்வாறான செயல்பாடுகள் குறித்த அறிக்கையை, பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us