அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
UPDATED : ஜூலை 07, 2026 06:10 PM
ADDED : ஜூலை 07, 2026 06:12 PM
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் நவ்ஷாத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிங்கப்பெண் சிறப்பு படை உதவி ஆய்வாளர் ரம்யா, சிறப்பாளராக பங்கேற்று, 'பொறுப்புணர்வும், ஒழுக்கமும், பாதுகாப்பும் மிக்க குடிமக்களை உருவாக்குதல்' என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேசியதாவது:
மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து நல்ல ஒழுக்கம், சட்டம் குறித்த அடிப்படை அறிவு, சமூக பொறுப்பு, பெண்கள் பாதுகாப்பு, தனிநபர் பாதுகாப்பு மற்றும் நற்பண்புகள் ஆகியவற்றை அவசியமாகக் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதைய சமூகச் சூழலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை சமாளிக்கும் வழிமுறைகள், சட்ட உத-விகளை அணுகும் முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில், மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை முன்வைத்து கலந்துரையாடினர். பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
