UPDATED : செப் 13, 2026 01:07 PM
ADDED : செப் 13, 2026 01:08 PM
புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா பல்கலைக்கழக அரங்கில் நடந்தது.
பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநர் செல்வராஜ் வரவேற்றார். புல முதன்மையர்கள் ஸ்ரீநாத், தமிழரசி, மகாதேவன், பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்துறை இயக்குநர் விவேகானந்தன் கல்விக்கான எதிர்கால பாதை குறித்து விளக்கினார். பொறுப்பு பதிவாளர் சுந்தரமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில், இயக்குனர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், புல முதன்மையர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சாருலதா, அஜய் டி விமல்ராஜ், கஜலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். இயற்பியல் துறைத்தலைவர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
