தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதியும் எங்கள் பள்ளியில் உள்ளது.

மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதியும் எங்கள் பள்ளியில் உள்ளது.

மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதியும் எங்கள் பள்ளியில் உள்ளது.


UPDATED : அக் 14, 2026 06:15 PM

ADDED : அக் 14, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 06:15 PM ADDED : அக் 14, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் நோக்கில், ஜே.இ.இ., நீட் நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் 6ம் வகுப்பு முதலே அடித்தளப் பயிற்சித் திட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் பலனாக, சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து இப்பள்ளி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

மேலும், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு மூலமாக இப்பள்ளி மாணவர்கள், நாட்டின் தலைசிறந்த தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். மாணவர்களின் கடின உழைப்பு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பள்ளியின் தரமான கல்வி வழிகாட்டுதலுக்கு இவையே சான்று.

திருப்பூர் மாவட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில், 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் முதலிடம்; கோவை சகோதயா கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். முதலமைச்சர் கோப்பை கூடைப்பந்து போட்டியில் மூன்றாமிடம், நீச்சல் போட்டியில், 11 பதக்கங்கள் வென்றனர்.திருப்பூர் சகோதயா நீச்சல் போட்டியில், 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று திருப்பூரில் அதிக பதக்கம் வென்ற பள்ளியாக பெம் ஸ்கூல் திகழ்கிறது.

தென் தமிழக சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகளிலும் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.கல்வி, விளையாட்டு, கலை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாணவரின் தனித்திறனையும் அடையாளம் கண்டு வளர்ப்பதே எங்களது முதன்மை நோக்கம். பல்லடத்திலும் எங்கள் பள்ளி நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் எதிர்காலத்தில் மிளிரும் நட்சத்திரமாக ஜொலிக்க செய்வதே எங்களின் லட்சியம்.

இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us