UPDATED : டிச 19, 2025 07:02 AM
ADDED : டிச 19, 2025 07:02 AM
கோவை:
நேரு கல்விக் குழுமத்தின், 17வது ஸ்ரீ பி.கே.தாஸ் நினைவு சிறந்த ஆசிரியர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா, திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. நேரு கல்விக் குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார்.
அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., எஸ்.ஆர்.சி., ஆலோசகர் ஜேக்கப் கல்லே, கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர் விருதுகள் வழங்கினர்.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா முழுவதும் உள்ள நிறுவனங்களிலிருந்து மொழிகள், வணிகம், மேலாண்மை, அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் தெரிவு செய்யப்பட்ட 22 பேராசிரியர்களுக்கு, சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
2025ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது, குமரகுரு நிறுவனங்களின் கிருஷ்ணராஜ் வாணவராயர் மற்றும் பாரதியார் பல்கலை கதிர்வேலு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நேரு கல்விக் குழுமத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

