ரஷ்யாவில் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள்: தமிழ்நாட்டில் ஸ்பாட் அட்மிஷன் கண்காட்சி
ரஷ்யாவில் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள்: தமிழ்நாட்டில் ஸ்பாட் அட்மிஷன் கண்காட்சி
UPDATED : மே 07, 2025 12:00 AM
ADDED : மே 07, 2025 05:26 PM

சென்னை:
2025-26ஆம் கல்வியாண்டில், இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ படிப்பு இடங்களை வழங்க இருக்கிறது.
கடந்த ஆண்டு இது 8,000 இடங்களாக இருந்தது. இந்த எண்ணிக்கையின் உயர்வு, ரஷ்யாவில் மருத்துவக் கல்வி பெற விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன் மே 10 மற்றும் 11ஆம் தேதிகளில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் எம்.பி.பி.எஸ். மட்டுமன்றி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான சேர்க்கையும் வழங்கப்படும்.
பங்கேற்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகம், மாஸ்கோ விமானப் போக்குவரத்துக் கல்வி நிறுவனம், மாஸ்கோ ஸ்டேட் பிராந்திய பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும்.
இது குறித்து சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் வாலெரி கோட்ஜெவ் கூறுகையில், இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை ரஷ்யா முழுமையாக பின்பற்றி வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், ரஷ்யா இந்திய மாணவர்களிடையே முக்கியமான மருத்துவக் கல்வி இலக்காக மாறியுள்ளது, என்றார்.
இது குறித்து சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தின் இயக்குநரும், துணைத் தூதருமான அலெக்ஸாண்டர் டோடோநவ் கூறுகையில், ரஷ்யாவின் கல்வி உதவித் திட்டத்தில், இந்த ஆண்டும் 200 இந்திய மாணவர்களுக்கு 100% கல்வி உதவித்தொகை வழங்கப்படும், என்றார்.
ரஷ்யாவில் மருத்துவக் கல்வி பற்றி ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், சுமார் 25,000 இந்தியர்கள் தற்போது ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகின்றனர். இது இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றுகிறது, என்றார்.
இந்தக் கல்விக் கண்காட்சி தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் நடைபெறுகிறது:
மே 13 - கோவை, தி கிராண்ட் ரீஜெண்ட்
மே 14 - சேலம், ஜி.ஆர்.டி. ஸைப் ஹோட்டல்
மே 15 - திருச்சி, பெமினா ஹோட்டல்
மே 16 - மதுரை, ராயல் கோர்ட் ஹோட்டல்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 9282221221