sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் கருவி கண்டுபிடிப்பு; ஜப்பானில் காட்சிப்படுத்திய ஆக்ஸாலிஸ் மாணவர்கள்

/

ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் கருவி கண்டுபிடிப்பு; ஜப்பானில் காட்சிப்படுத்திய ஆக்ஸாலிஸ் மாணவர்கள்

ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் கருவி கண்டுபிடிப்பு; ஜப்பானில் காட்சிப்படுத்திய ஆக்ஸாலிஸ் மாணவர்கள்

ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் கருவி கண்டுபிடிப்பு; ஜப்பானில் காட்சிப்படுத்திய ஆக்ஸாலிஸ் மாணவர்கள்


UPDATED : பிப் 12, 2026 02:17 PM

ADDED : பிப் 12, 2026 02:20 PM

Google News

UPDATED : பிப் 12, 2026 02:17 PM ADDED : பிப் 12, 2026 02:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:
ஆக்ஸாலிஸ் மாணவர்கள், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிய 3 கருவிகளை ஜப்பானில் காட்சிபடுத்தினர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 8 முதல் பிளஸ் 1 வரை பயிலும் மாணவர்கள் பெருநகரங்களில் தண்ணீர் வீணாகுவதை தவிர்ப்பதற்காக, ஏ.ஐ., தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 3 கருவிகளை உருவாக்கினர்.

கட்டடங்களில் உள்ள தண்ணீர் பைப்பில் கசிவு ஏற்பட்டால் அதை உடனடியாக தெரியப்படுத்துதல், தண்ணீரில் உள்ள சோடியம், மெக்னீசியம், குளோரைடு, உப்பு அளவுகளை தெரியப்படுத்துதல் மற்றும் விளைநிலங்களில் பயிரின் வெப்பத்தை துல்லியமாக கண்டறிந்து, தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சுதல் ஆகியவற்றிற்காக 3 கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த கருவிகளை 'இந்தோ - ஜப்பான் ஸ்டூடண்ட்ஸ் எக்ஸ்சேஞ்ச் ப்ரோகிராம்' என்ற திட்டத்தின் மூலம் ஜப்பானில் காட்சிப்படுத்தி, கருவிகள் செயல்படும் விதம் குறித்து எடுத்துரைத்தனர். ஜப்பானில் உள்ள பல்வேறு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இந்த கருவிகளை பார்த்து, தமிழகத்தின் பாடத்திட்ட முறைகள் குறித்து தெரிந்து கொண்டனர்.

மேலும், ஆக்ஸாலிஸ் பள்ளி மாணவர்கள் 6 நாட்கள் ஜப்பானில் தங்கி அந்நாட்டு பாரம்பரிய கலாசாரம், அறிவியல் தொழில்நுட்பம், கணிதம், பாடத்திட்டங்கள், வகுப்பறைகள் குறித்து தெரிந்து கொண்டனர்.

பாரதி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கந்தசாமி, ஆக்ஸாலிஸ் பள்ளி தாளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்திபாரத்குமார் ஆகியோர் ஜப்பானுக்கு சென்று காட்சிப்படுத்திய மாணவர்களையும், பள்ளி முதல்வர் ஜாய்ஸ்ரெக்ஸியையும் பாராட்டி வாழ்த்தினார்.






      Dinamalar
      Follow us