கல்வி கற்க முடியாத மாணவர்களின் பெற்றோரே... கவலை வேண்டாம்!
கல்வி கற்க முடியாத மாணவர்களின் பெற்றோரே... கவலை வேண்டாம்!
UPDATED : ஜூன் 16, 2025 12:00 AM
ADDED : ஜூன் 16, 2025 08:42 AM
 கற்றலில் பின்தங்கும் சில மாணவர்களின் பெற்றோர், நமக்கு பிறகு நம் பிள்ளைகள், வருமானம் இன்றி என்ன செய்வார்களோ... என அச்சப்படுகிறார்கள்.
இப்பேர்ப்பட்ட குழந்தைகளிடம் உள்ள பிற திறமைகளை கண்டு, அதற்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சி அளித்தால் இவ்வாறு அச்சப்படத் தேவையில்லை என்கிறார், கீரணத்தத்தை சேர்ந்த ஆல்ட்ரூ அறக்கட்டளை நிறுவனர் சாந்தி. இங்கு கற்றலில் பின்தங்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
கேக் தயாரிப்பு, காலண்டர் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, கம்ப்யூட்டர் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பயிற்சி பெற்ற மாணவர்கள் தயாரித்துள்ள, கைப்பை, வர்ண மெழுகுவர்த்திகள், கண்ணாடி வேலைப்பாடுகள், எம்ப்ராய்டரி, கைவினைப் பொருட்கள் என, அனைத்து பொருட்களும் அசத்துகின்றன.
சாந்தி கூறியதாவது:
கற்றலில் பின்தங்கும் இதுபோன்ற குழந்தைகளுக்கு, கல்வி கற்பதில் தான் சிரமம் ஏற்படுகிறது. அதை பெற்றோர் உணராமல், சாதாரண பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். அங்கு அவர்கள் மிகப்பெரிய சவால்களை சந்திக்கின்றனர். இவர்களுக்கு லாஜிக்கல் திங்கிங் இருக்காது. ஆனால், இவர்களை அலுவலக பணியில் அமர்த்தினால், திறம்பட மேற்கொள்வர்.
ஒரு சிலர் மட்டுமே அக்கறையுடன் இருக்கின்றனர். தட்டிக் கொடுத்தால் சிறப்பாக பணிபுரிவர். இவர்கள், தங்கள் சொந்த காலில் நிற்க பயிற்சி வழங்குகிறேன். இவர்களுக்கான இடத்தை தேடிக்கொண்டே இருக்கிறோம். சமூகம் இவர்களை அங்கீகரிக்க வேண்டும், என்றார்.

