UPDATED : ஆக 21, 2024 12:00 AM
ADDED : ஆக 21, 2024 08:25 AM

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை களை மேலாண்மை பிரிவின் கீழ், விவசாயிகள், பண்ணைத்தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் களை ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கீழ், செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும், ஆக., 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு முகாமில், பார்த்தீனியம் களைச்செடி பற்றியும், அதன் நச்சுத்தன்மை, கட்டுப்படுத்தும் முறைகள், அதன் நச்சுத்தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பார்த்தீனிய செடி பூக்கும் முன், பிடுங்கி உரமாக்கும் செயல்பாடுகள் குறித்தும் பயிற்றுவிக்கப்பட்டது.
இம்முகாமில், உழவியல் துறை தலைவர் பரசுராமன், களை மேலாண்மை பிரிவு டீன் ராதாமணி, இணை பேராசிரியர் பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பல்வேறு இடங்களில், இம்முகாம்கள், 22ம் தேதி வரை நடக்கும் என பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.