UPDATED : செப் 15, 2026 05:49 PM
ADDED : செப் 15, 2026 05:56 PM
சின்னசேலம்:
சின்னசேலம் நுாலகத்தில் பயின்று சென்னை உயர்நீதிமன்ற தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்தவருக்கு பாராட்டு விழா நடந்தது.
சின்னசேலம் அடுத்த பைத்தந்துறையைச் சேர்ந்தவர் கனியன் மகன் அருண், 28; எம்.ஏ., பட்டதாரியான இவர், சென்னை உயர்நீதிமன்ற தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்வெழுத விண்ணப்பித்தார். தொடர்ந்து, அதற்காக பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்காமல், சின் னசேலம் முழுநேர கிளை நுாலகத்தில் புத்தகங்களை எடுத்து படித்தார்.
தேர்வில் பெற்றி பெற்ற அருணுக்கு சங்கராபுரம் தாலுகா, நீதித்துறையில் அலுவலக உதவியாளர் பணி கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடந்துது. கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் சார்பில் சின்னசேலம் முழு நேர கிளை நுாலகத்தின் நுாலகர் நல்லதம்பி பாராட்டி கவுரவித்தார்.
