UPDATED : ஏப் 30, 2024 12:00 AM
ADDED : ஏப் 30, 2024 09:27 AM

சென்னை:
ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஓய்வூதியம் பெறுவதில் புதிய நடைமுறையை பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் அறிவித்துள்ளன.
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் சார்பில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
முறையாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, ஒரு மாதத்திற்குள் அவர்களுக்கான பணப்பலன், ஓய்வூதிய பலன் அளிப்பது தொடர்பான பணிகளை முடிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு, பள்ளி சார்ந்த பணிகளில், பள்ளி கணக்கிலான நிதி பயன்பாட்டில் தணிக்கை குழு தடை இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டாம்.
அதேநேரம், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளி நிதியை தனிப்பட்ட பொறுப்பில் பயன்படுத்தியதில், கணக்கு தணிக்கை ஆட்சேபனை இருந்தால், அவர்களுக்கான ஓய்வூதிய பலனை நிறுத்தி வைக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதனால், பள்ளி சார் நிதி பயன்பாட்டில், தணிக்கை குழு தடையில் உள்ள ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.